Pages

Wednesday, February 2, 2011

சுறுசுறு விஜய்

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி, அரசியல் பிரஷர் என்று பல வாரங்களாக அல்லாடிக் கொண்டிருந்த விஜய் மீண்டும் சுறுசுறுப்புக்கு வந்திருக்கிறார்.

காவலன் எதிர்மறையான விமர்சனத்தை சில இடங்களில் கிளப்பினாலும் இப்போது படம் பிக்கப்பாகியுள்ளது. எவருக்கும் காவலனால் நஷ்டம் ஏற்படாது என்பது தெ‌ரிந்த பிறகே இளைய தளபதியின் முகத்தில் உற்சாகமே பிறந்துள்ளது. இதே ஸ்பீடில் வேலாயுதம் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பை பொறுத்தவரை ஏறக்குறைய முடிந்துவிட்டது.

ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலும் விஜய் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். வரும் 7ஆம் தேதியிலிருந்து ஷங்கர் படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார். 

வேலாயுதம், 3 இடியட்ஸ் ‌ரீமேக் இரண்டுமே நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை விஜய்க்கு இருப்பதால் அளவுகடந்த உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்.
Source : WebDunia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment