Pages

Monday, February 14, 2011

HISTORY OF வந்தியத்தேவன்


வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர்.

முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.

வந்தியத்தேவன், கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக  உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.

மேலும் வேங்கையின் மைந்தன் என்னும் அகிலனின் புதினத்திலும், நந்திபுரத்து நாயகி என்னும் விக்கிரமனின் புதினத்திலும் வந்தியத்தேவனின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment