Pages

Tuesday, February 22, 2011

தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறார்

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
தேர்தலில் ஆதரவு  யாருக்கு?
விஜய் நாளை அறிவிக்கிறார்தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில்    நாகை வழிவலம் தேசிகர் பாலி டெக்னிக் அருகில் நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விஜய் தலைமை தாங்குகிறார்.  தமிழகம் முழுவதும் இருந்து விஜய்யின் ரசிகர்கள்  திரள்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு மண்டலம் வாரியாக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டது.
 
நாகை ஆர்ப்பாட்டத்தில்  ஆயிரக் கணக்கான வாகனங்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு முதலே ரசிகர்கள் நாகையை நோக்கி புறப்படுகிறார்கள். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்தபோது போரை நிறுத்தக்கோரி சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்தார்.
 
இப்போது நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கி கட்சி தொடங்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்குவதை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலிலேயே விஜய் தனது அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 3 முறை சந்தித்து உள்ளார். எனவே அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
 
இதை எதிர்பார்த்து திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஆங்காங்கே ஜெயலலிதாவுடன் விஜய் நிற்கும் பட  பேனர்களை வைத்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

No comments:

Post a Comment