Pages

Tuesday, February 22, 2011

தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறார்

நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
தேர்தலில் ஆதரவு  யாருக்கு?
விஜய் நாளை அறிவிக்கிறார்தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில்    நாகை வழிவலம் தேசிகர் பாலி டெக்னிக் அருகில் நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விஜய் தலைமை தாங்குகிறார்.  தமிழகம் முழுவதும் இருந்து விஜய்யின் ரசிகர்கள்  திரள்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு மண்டலம் வாரியாக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டது.
 
நாகை ஆர்ப்பாட்டத்தில்  ஆயிரக் கணக்கான வாகனங்களில் சென்று கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு முதலே ரசிகர்கள் நாகையை நோக்கி புறப்படுகிறார்கள். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்தபோது போரை நிறுத்தக்கோரி சென்னையில் நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்தார்.
 
இப்போது நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கி கட்சி தொடங்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்குவதை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்து உள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலிலேயே விஜய் தனது அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 3 முறை சந்தித்து உள்ளார். எனவே அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.
 
இதை எதிர்பார்த்து திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஆங்காங்கே ஜெயலலிதாவுடன் விஜய் நிற்கும் பட  பேனர்களை வைத்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நாகையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி நாகை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றி : மாலைமலர்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay gears up for his first public meeting


VijayIlayathalapathy Vijay is all set for his first public meeting tomorrow. In a bid to enter politics, he is gearing up to address the people on the Tamil fishermen issue at VTP College Grounds, Nagapattinam.

Vijay will be accompanied by his father SA Chandrasekhar and he is backed by Jayalalitha's AIADMK. The actor, who revealed to a Tamil publication that a few people from the ruling party troubled him duringKaavalan release, will be raising his voice against the ruling party for failing to protect the lives of the fishermen. 

However, Vijay has postponed his political entry for four years but has decided to involve indirectly by supporting his father SA Chandrasekhar. Meanwhile, the actor is busy with Shankar's Nanban, a remake of Bollywood movie 3 Idiots. He has also reportedly signed Mani Ratnam's historical movie Ponniyin Selvan.

Thanks: OneIndia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay’s statement on Nagapattinam rally


Vijay is all set to make his first big move towards plunging in politics. The actor will address a large public meeting in Nagapattinam condemning the Srilankan navy’s killing of Tamil fishermen and also the apathy of Indian government in protecting the Tamil fishermen. 
 
This will be his first ever public meeting after his political inclinations were made public. The whole event is expected to have large political tones as Vijay’s father SA Chandrasekaran had met AIADMK supremo J.Jayalaithaa for the second time a few days ago.
 
In a statement released today, Vijay had called upon his fans and all general public to join him in the protest meeting. He has said that the eight crores Tamils living in this world will rise up together to support if anything happens to even one Tamil anywhere in the world.
 
Vijay will address the protest meeting from the VTP College Grounds in Kadanpady Road, Nagapattinam at 4pm.

Thanks : IndiaGlitz
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

மீனவர்கள் மீது தாக்குதல் நாகையில் நடிகர் விஜய் இன்று ஆர்ப்பாட்டம்


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 

இதுபற்றி நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடித்து சென்று சித்ரவதை செய்வதும் அவர்களின் தொழில் உபகரணங்களை பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.

அவர்களின் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து, அவர்களுக்காக குரல் கொடுக்க நினைத்தேன்.  அதற்காக, இன்று மாலை, 4 மணியளவில் நாகப்பட்டினம் காடம்பாடி வி.டி.பி கல்லூரி மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயம் மீது திசை திருப்ப, ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.  எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், நிதியுதவி வழங்கி விஜய் பேசுகிறார்.

நன்றி : தினகரன்
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Monday, February 21, 2011

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க...! - விஜய் அறிக்கை

Vijayதனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 'சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்', என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம். 
கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.
அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். 

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும். 

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

Thanks : OneIndia
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

நாளை விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!


Vijayதமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாளை நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.


தமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.


இந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay-All set for his political entry!

After dilly dallying for months,Ilayathalapathi Vijay is all set to enter the murky world of Tamilnadu politics. Vijay will be making his first political foray tomorrow (February 22) at a public meeting in Nagapattinam.Vijay will be speaking about the explosive issue of the "attitude of Sri Lankan government towards Tamil Nadu fishermen".

The TN fishermen issue is a very sensitive issue in coastal Tamil Nadu as it has resulted in the death of local fishermen in the hands of the Sri Lankan army.  In a recent interview to a Tamil tabloid, Vijay has hit out at the DMK government and the way the first family is controlling Kollywood.  

Remember how Vijay went through hell trying to release his Pongal filmKaavalan. To drum up support with opposition parties for the Nagapattinam meet, Vijay father SA Chandrasekhar met up with ADMK supremo J Jayalalithaa at her Poes Garden residence on Saturday.  

He wanted the support of Jayalalithaa and her party for the protest meet.

Thanks : Sify
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Sunday, February 20, 2011

ஜெயலலிதாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.


 கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.


 மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து விஜயின் மக்கள் இயக்கம், வரும் 22-ம் தேதி நாகை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

வந்தியத்தேவனாக விஜய்.........


கடந்த பத்து நாட்களுக்கு முன்பே நம் காதுகளை எட்டிய தகவல்தான் என்றாலும் இது புரளியாகவும் இருக்கலாம் என்று மணிரத்திரனம் அலுவலகமான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொல்லட்டும் என்று காத்திருந்தோம். இப்போது மிகவும் நம்பிக்கையான மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் அந்த வதந்தியை உறுதி செய்கிறது. ஆமாம்! மணிரத்தினம் சன் பிக்சர்ஸ் நிதி உதவியுடன் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில், அந்த நாவலின் முதன்மைக் காதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனாக இளைய தளபதி விஜய் நடிப்பது 90% உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். விஜய்க்கு பொன்னியின் செல்வன் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவரது அப்பா எஸ்.ஏ.சி மூலம் பொன்னியின் செல்வன் கதை சொல்லப்பட்டுள்ளது என்றும், இதற்கு எஸ்.ஏ.சியின் முன்னாள் உதவியாளர்களில் ஒருவரான வருண் என்பவர் மிகவும் உதவியதாகவும் தெரியவருகிறது.

விஜய்க்கு வந்தியத்தேவன் என்றால் நாவலின் தலைப்பான பொன்னியின் செல்வனாக அதாவது ராஜாராஜ சோழனாக சியான் விகரம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ராவணன் படத்தில் நடிக்கும் போதே அவருக்கு பொன்னியின் செல்வன் ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலை படிக்கக் கொடுத்து இதிலில் உள்ள நான்கு முக்கிய காதாபாத்திரங்களில் உனக்கு எது வேண்டுமோ நீயே தேர்வு செய்து கொள் என்றாராம் மணி. இப்படி விக்ரமே தேர்வுசெய்த கதாபாத்திரம்தான் ராஜராஜன் என்கிறார்கள். அதேபோல விஷாலும் ஒரு பாத்திரத்தில் நடிப்பார் என்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உத்தமச்சோழனாக (மதுராந்தகத் தேவர்) நடிக்க இருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது.

இந்தப் பட்டியல் நம்பகமான வட்டத்திலிருந்து கிடைத்தாலும், அதிகாரபூர்வமாக உறுதி செய்ய்யும் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் HIT

விஜய் பற்றி செய்திகள் கோடம்ப்பாக்கத்தில் மேலும் சூடு பிடித்திருக்கின்றன

மணிரத்தினம்- சன் பிக்ஸர் கூட்டுத்தயாரிப்பாக பலநூறு கோடியில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைவடிவம் பெற இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மணிரத்தினம் அலுவலகத்தில் விசாரித்தால், 

தற்போது இது ஸ்கிரிப்ட் என்ற கட்டத்தில்தான் இருக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து ஸ்கிரிப்டை இறுதிபடுத்தி வரும் மணி ரத்தினம், 

திரைவடிவத்துக்காக நாவலின் சம்பவங்களில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆலோசித்து வருகிறாராம். இந்தப்படத்தில் விகரம் மட்டுமே தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. 

மேலும் வந்தியத்தேவனாக விஜய் நடிக்க இருக்கிறார் என்று வெளியாகும் தகவல்கள் பற்றி இப்போதைக்கு மனி அலுவலகத்தில் வாயைத்திறக்க மறுக்கிறார்கள்.  

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE