Friday, February 25, 2011
ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்
மூன்று முறை அதிமுக தலைமையை சந்தித்துவிட்டார் எஸ்.ஏ.சி. இன்னும் முப்பது படங்களில் நடித்துவிட்டுதான் விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் நான் அதற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் அவர். இந்த விளக்கம், இதற்காகதான் அவர் ஜெ.வை சந்தித்தாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது மக்களிடம்.என் பிள்ளைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்'கொடுப்பாரோ?
பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்கு, என் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால், அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!
Thanks : vizhiyepesu
Thursday, February 24, 2011
தளபதியின் முழக்கம் புகைப்படம்
விஜய் - வேட்டைக்காரன் தெலுகில் புலி வேட்டையாக ரிலீஸ்

Tamil star Vijay and awesome beauty Anushka starrer ‘Puli Veta’ (dubbed version of Tamil film Vettaikaaran) is ready to hit the screens. Release is planned in the first week of Mar.
The film (Vettaikaaran) is directed by debutant B. Babusivan and produced by M Balasubramanian and B Gurunath Meiyappan under prestigious AVM Productions banner and distributed by Sun Pictures. Renowned production designer M.V. Gopala Rao is presenting the Telugu version on Jyothi Arts Banner.
Real Star Srihari played a key role (as a sincere police officer) in the film. Other cast includes Sayaji Shinde, Salim Ghouse, Sanchita Padukone, Sathyan, Sai Kumar, Srinath, Cochin Haneefa, Delhi Ganesh, Jason Sanjay and Madalasa Sharma (in a cameo appearance).
The film has dialogues written by Shashank Vennelakanti, music composed by Vijay Anthony and lyrics penned by Bhuvanachandra, Vennelakanti and Vanamali. Gopinath handled cinematography while editing is done by V T Vijayan.
விஜய் மக்கள் இயக்கம் கண்டன பொதுக்கூட்டம்
அடாத மழை... நாகை காடம்பாடி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள். ஓயாத விசில் சத்தம், கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கொட்டும் மழை... மேடைக்கு இன்னும் வராத விஜய்! இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேரம் சென்று கொண்டே இருக்க... மழைக்காக இனி ஒதுங்க முடியாது என தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை காண மேடைக்கு வந்துவிட்டார் விஜய். காதைக் கிழிக்கிறது ஆரவாரங்கள். ரசிகர்களுக்கு கையசைக்கிறார் விஜய்! அடங்காத விசில் சத்தம்... ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறார் விஜய். மேடைக்கு முன்பாக விஜய்யை நோக்கி நகர்கிறார்கள் ரசிகர்கள்... உற்சாகமாகிறார் விஜய்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது... கொட்டும் மழையில் இடி என முழங்கினார் விஜய்.
நாம் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டாமா என்று சொன்னபடியே எடுத்து விட்டார் ஒரு பாட்டு... நான் அடிச்சா தாங்க மாட்ட! நாலு மாசம் தூங்க மாட்ட! மோதிபாரு வீடு போய் சேர மாட்ட! சொல்லவா வேண்டும், விண்ணைப் பிளக்கிறது விசில் சத்தம்!
இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் என்று தொடர்ந்தது முழக்கம்.
வேலாயுதம் படத்தில் எனக்கு பிடித்தப் பாட்டு இது என்று சொன்ன விஜய், ரத்ததின் ரத்தமே... என்று ரசிகர்களை கைகாட்டி பாடத் துவங்கினார்.
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று பேச்சை முடித்தார்.
மீனவர்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்

தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கைக்கு அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள் மீனவர்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று நாகையில் நடிகர் விஜய் பேசினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. விஜய் தந்தையும் "விஜய் மக்கள் இயக்கத்தின்' பொதுச்செயலருமான இயக்குநர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார்,பாண்டியன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியும் 10 மீனவர்கள் குடும்பத்தினருக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியும் நடிகர் விஜய் பேசியதாவது;
மீனவர்களுக்கு கடல் தான் தாய்,கடல் மாதாவை மீறி மீனவர்களை இலங்கை தாக்குகிறது.இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மீனர்வர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புரியவில்லை.இத்தகைய தாக்குதலை தாங்க முடியாமல் வேதனை கலந்த உணர்வோடு வந்திருக்கிறேன். இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
இங்கு நாம் அனைவரும் முக்கிய குறிக்கோளுடன் கூடியுள்ளோம்.கோழைகள் இல்லை அடங்கி விட்டோம் என நினைக்காதீர்கள்.மீனவர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என்மீது விழும் அடியாக உணர்கிறேன்.நாம் ஏதோ வந்தோம் கூடினோம்,சென்றோம் என்று இருக்கக் கூடாது.நமது எதிர்ப்பை பதிவு செய்ய இன்றே அனைவரும் பிரதமருக்கும்,தமிழக முதல்வருக்கும் இலட்சக்கணக்கான தந்திகள் அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் தந்திகள் நாளை பிரதமர் முதல்வர் வீட்டு கதவை தட்ட வேண்டும்.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட ஜெயக்குமார்,பாண்டியன் ஆகியோருக்காக நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.
நாகையில் நடிகர் விஜய் பொதுக்கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகையில் "விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் செவ்வாய் காலையிலிருந்து வாகனங்களில் வரத்துவங்கினர்.இதில் அனைவருமே 15 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். பஸ்கள்,வான்கள்,கார்கள் மற்றும் ஆட்டோவில் வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியால் கூச்சல் போட்டுக்கொண்டு சாலைகளில் ஆர்ப்பரித்து பொதுமக்களை கலங்கடித்து சென்றனர்.
தினமலர்
Wednesday, February 23, 2011
நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 மணிக்கு திடீரென நாகையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காடம்பாடி மைதானத்தில் ரசிகர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மாலை 5.30 மணி வரையும் நடிகர் விஜயால் மேடைக்கு வர முடியவில்லை. 5.35 மணியளவில் மழைலேசாக தூறியதை தொடர்ந்து 5.45 மணிக்கு நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது மேடை முன் திரண்டிருந்த ரசிகர்கள் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு திரும்பினார்.
நாகை: விஜய் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கூச்சல்;
மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.மழை வேறு பெய்துவருவதால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்து கோபமடைந்த விஜய், கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறினார்.
இன்னும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க கொட்டும் மழையிலும் இருந்தார்கள்.
Vijay’s telegram technique
It was a time-tested strategy of Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi to send telegrams to New Delhi to press the Union government on various issues.On Tuesday, Vijay, addressing a protest in Nagapattinam to condemn the killings of Tamil fishermen, urged his fans to send telegrams to Karunanidhi and also to Prime Minister Manmohan Singh, over the issue.
Accusing the Centre and State governments of being mute spectators to indiscriminate attacks on fishermen, the ‘Ilaya Thalapathi’ said Tamils should come together whenever there is a problem to fellow Tamils.
Meanwhile, frenzied fans scrambled on to the stage and when the crowd got unmanageable, police used mild force to keep them away. Even Vijay got irked at one point of time and walked out of the stage. Later, office-bearers of his Makkal Iyakkam pacified the actor and brought him back to the stage.
Thanks : IndiaGlitz
மீனவர்கள் நலன் காக்க பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும்: விஜய் கோரிக்கை
மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அத்துடன் மழை பெய்ததால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்தச் சூழ்நிலையை அறிந்த விஜய் கோபமடைந்தார். கடும் மழை பெய்துவருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார்.பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேச விஜய் வந்தார். மாலை 7 மணிக்கு பேச ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். முதலில் கொடுமைப்படுத்தினார்கள். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை காக்க போராடுவோம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். மீனவர்கள் நலன் காக்க மத்திய மாநில அரசுக்கு ரசிகர்கள் தந்தி அனுப்ப வேண்டும். பிரதமர் வீட்டில் தந்திகள் குவிந்து இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் அண்மையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோரின் குடும்பத்து:ககு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் அண்மையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயக்குமார், பாண்டியன் ஆகியோரின் குடும்பத்து:ககு நடிகர் விஜய் நிதி உதவி வழங்கினார்.
நன்றி: நக்கீரன்
மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்காதது ஏன்? - விஜய்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் நடிகர் விஜய்.
இலங்கை கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகை, காடம்பாடி திடலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனை.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.
தந்தி அனுப்புங்கள்: கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி (பிப். 23 முதல்) அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
Subscribe to:
Posts (Atom)


