Pages

Sunday, March 20, 2011

விஜய் அடுத்து நடிக்கும் படம் எது?

விஜய் அடுத்து நடிக்கும் படம் எது என்பது குழப்ப நிலையாகவே உள்ளது.விஜய் அடுத்து பகலவன் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிப்பதாக இருந்தது இப்போது ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது.அது என்னவெனில் விஜய் அடுத்து சங்கரின் தயாரிப்பில் சங்கரின் உதவியாளர் இயக்கும் படத்துக்கு கால்சீட் கொடுத்துள்ளார் என இது முழுவதும் உண்மையான செய்தி அன்று இசை தமன் எனக்கூறப்பட்டுள்ளது.உறுதி செய்யும் மட்டும் பொறுத்திருந்து தான் பார்கணும்.விஜய் அடுத்து சீமானின் கோபம் படத்தில் நடிக்க உள்ளார்.இது மேமாதம் தொடங்கவுள்ளது.இந்த வருட இறுதியில் மணிரத்தினம் படத்தில் நடிக்க உள்ளார்.அதன் பின் அமீரின் கண்ணபிரான் விக்ரம் கே குமாரின் 24 களவாணி சற்குணத்தின் படம் என உள்ளன.


எனினும் அமீரின் படத்துகே முன்னுரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Saturday, March 19, 2011

விஜய்க்கு குஷ்புவின் அட்வைஸ்


நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கேட்கப்பட்டது.மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது.சினிமாவை விட அரசியல் கஷ்டமான விஷயம். நடிகைகளில் ஜோதிகாவையும் நடிகர்களில் கார்த்திக்கையும் எனக்கு பிடிக்கும். அனுஷ்காவும் என்னை கவர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேச மாட்டேன். குறிப்பாக சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் போன்றோரை விமர்சிக்க மாட்டேன்.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங்களுக்கு பிறகு தனிக்கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளார்.விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்புவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம்.ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்...", என்றார்.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Ellaam Nalam assures Shankar,completes Nanban 2nd schedule



Director Shankar has come out with some fresh announcements for Nanban fans. ‘Ellaam Nalam(All Is Well)’ came the confirmation from the director after completing  the 2nd shooting schedule for Nanban in Dehradun.The shoots were going on college premises and the director loved the campus air as he shares, “It’s a visually wonderful campus.” TheNanban experience has been a completely new one for Shankar especially working with Vijay, Sathyaraj, Ileana and many others.He is really excited how things have turned out so far.He further added “Vijay-Sathyaraj combo is fresh and fantastic.Vijay, Jeeva and Srikanth’s ‘Physics’ & ‘Chemistry’ is working very well, behind the camera too.”
Shankar is all praises for the dedication everyone has put in at the sets and says that each one of them present have‘started living their roles’. A thrilling outing all together for the rejuvenated director who believes the raw reality of the storyline in Nanban is in complete contrast from that of the fantasy sci-fi offering ‘Endhiran’.



YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Thursday, March 17, 2011

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் விஜய்?

ஜெயலலிதா போட்ட ஒரே ஒரு குண்டு, கூட்டணிக் கட்சிகளை பஞ்சாய் பறக்க வைத்துவிட்டது!இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைத்து, ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனும் அவரது மகனும் நடிகருமான விஜய்யும்தான்.இந்த இருவரும் நேரடியாகவே திமுகவைத் தாக்கினர். எஸ் ஏ சந்திரசேகரன் அடிக்கடி ஜெயலலிதாவைச் சந்தித்துவந்தார்.விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு பேசி வந்தார். ஆனால் இப்போதோ என்ன சொல்வதென்றே புரியாத குழப்பத்தில் தடுமாறிக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா தன்னிச்சையா 160 தொகுதிகளை மட்டுமல்ல, வேட்பாளர்களையும் சேர்த்தே அறிவித்ததில் எஸ்ஏசி ஏக அப்செட். இனி தங்களுக்கு அதிமுக கூட்டணியில் இடம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சிகள்தான் அதிமுகவின் பலமாக இருந்தது. இன்றைக்கு அந்தக் கூட்டணி கட்சிகளே பிய்த்துக் கொண்டு ஓடும் மூடுக்கு வந்துவிட்டதால், தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள அதிமுகவுடன் எதற்கு சகவாசம், அமைதியாக இருங்கள் என்று பலரும் அட்வைஸ் பண்ணுகிறார்களாம் எஸ்ஏசிக்கு.ஒருவேளை கூட்டணியில் சீட் கொடுத்தால், ஆதரவு அறிக்கை, பிரச்சாரம் என மகனை களமிறக்கும் திட்டத்திலிருந்த சந்திரசேகரன், இப்போது நிலைமை கைமீறிப் போயுள்ளதைப் பார்த்து, 'அவசரம் வேண்டாம். பொறுத்திருப்போம்' என்கிறாராம்.'இதைத்தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்', என்று கூறிவிட்டு, ஷங்கரின் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டாராம் விஜய்!
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

A.R Rahman, sure-shot in Ponniyin Selvan


a-r-rahman-mani-ratnam-17-03-11There is a huge buzz surrounding Mani Ratnam’s Ponniyin Selvan. Kalki’s epic classic has captivated generations of Tamilians and continues to do so. Fans of his work are anxious to find out who will play the characters that are deeply ingrained in their hearts. So far Vijay, Mahesh Babu, Arya, and Anushka have been confirmed for the project.In recent times, Mani and A.R Rahman have teamed up together to create memorable music and so it was believed that they would come together again for this mammoth undertaking. But there were reports that Rahman is far too busy with international projects to be a part of Ponniyin Selvan. 

However, sources within Mani’s camp insist that it will be Rahman who will be doing the music. It must be remembered that Mani had wished to make Ayutha Ezhuthu without music but Rahman would not hear of it. He came up with some magnificent tunes and convinced Mani to include the songs in his movie. This time also the two legends will work together and hopefully the results will do the Tamil film industry proud.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

விஜய்யுடன் நடிக்க இலியானாவுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம்


விஜய்யுடன் நடிக்க இலியானாவுக்கு
 
ரூ.1 1/2  கோடி சம்பளம்தற்போது விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக் ஆகும்.இதில் நடிக்க இலி யானா ரூ. 1 1/2  கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட தென்னிந்திய கதாநாயகிகள் யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படமொன்றில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தர தயார் என்று தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் பேசி இருக்கிறார்.
 
இந்திப் படமொன்றில் நடிக்க இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அப்படம் ஹிட்டானால் சம்பளம் மேலும் உயரும் என கூறப்படுகிறது.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

இளைய எம்.ஜி.ஆர் விஜய்?



விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பரபரப்பு கிளம்பியதுமே அடுத்த எம்.ஜி.ஆர் ஆக நினைக்கிறாரா விஜய் என்று கேள்விகள் எழும்பின. அதன் பிறகு ரசிகர் மன்ற போஸ்டர்களில் இளைய எம்.ஜி.ஆர் விஜய் என்று எழுதப்பட்டது. ஏற்கெனவே கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் இருக்க இது என்னப்பா புதுசா இருக்கே என்று நினைக்க, சமீபத்திய விழா ஒன்றில் அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர். சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் விஜய் நடிக்கிறார். விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை.  

’’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்றுசொல்லக் கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    எம்.ஜி.ஆர் போல விஜய் அரசியலுக்கு வருவார். யாரும் நடிக்க வரும்போதே அரசியல் ஆசையோடு வருவதில்லை. காலம் அவர்களை கட்டாயப் படுத்துகிறது. விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார். அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குனர் சீமான் பேசுகையில் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய்.   எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம். எனக்கான சுவாசத்தை நான் தான் சுவாசிக்க வேண்டும். என் தம்பி விஜய்க்கான அரசியலை அவர் தான் செய்வார். வரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.

உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.  மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் 
போராளி. 

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார். மேலும் ஒரு மனிதன் குழுபைக் குறைக்கலாமே தவிர கோபத்தைக் குறைக்ககூடாது. எங்கள் கோபம் இன்னும் அதிகமாய் வெளிப்படும் வகையில் என் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் பகலவன் படம் வெளிவரும் என்றார்.

விழாவுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் வரவில்லை..
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Vijay Makkal Iyakkam ready to turn against DMK


Vijay-Jayalalitha-AllianceVijay Makkal Iyakkam or VMI is going to have a hard swing at the DMK for the behind the scenes damage they did to Vijay’s comeback movie Kaavalan. VMI claims DMK was the reason behind all the fuss during the pre release of the movie.The party DMK has its share of worries soaring these days as majority of Vijay fans who primarily joined the VMI had been supporters of DMK previously and now all of them may shift base to VMI turning up against DMK it self.


When we spoke to Tiruchy district president of VMI R K Raja he said,

“We are not concerned about the number of seats; we will dedicatedly work for the winning of AIADMK.We have the maximum number of units of VMI in the State with 16,000 followed by Madurai that has 14,000 units.”

For the facts for many years even Mr. Chandrasekhar (Vijay’s dad) had good things to say about DMK but now it has all turned upside down with Illayathalapathy Vijay having a swung in favor of AIADMK.

Vijay’s own party Vijay Makkal Iyakkam, is leaving no stone unturned to ruin DMK’s winning hopes in the upcoming April 13 elections even though their leader will be campaigning for AIADMK probably on the condition that the party is given 5 seats to contest. VMI has been allotted only 3 seats as of yet . Keep visiting us for more updates.
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

Wednesday, March 16, 2011

பிரசாரத்துக்கு நோ; அறிக்கை மட்டும்தான்! விஜய் அதிரடி


Vijay`s political updateவரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE

திகைக்க வைக்கும் தெலுங்கு ஹீரோக்கள்


தெலுங்கில் படம் இயக்கவும், நடிக்கவும் நம்மாட்கள் ஆசைப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்தியாவிலேயே இங்குதான் சம்பளம் அதிகம்.தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இவரது சம்பளம் முந்தைய படம் வரை ஏழு கோடி. இப்போது ஒன்பது கோடிகள். இவருக்கு அடுத்த இடத்தில் ரவி தேஜா. ஏழு கோடிகள் வாங்குகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தொடர்ந்து ச‌ரியாகப் போகாததால் ஆறு கோடிக்கு சம்பளம் கீழிறங்கியுள்ளது.தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ர‌ஜினி, கமல், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். அல்லு அர்ஜுன் போன்ற சுமாரான ரசிகர்கள் உள்ள ஹீரோக்களே தெலுங்கில் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது மற்ற மொழி நடிகர்களுக்கு பொறாமை வரவைக்கும் செய்தி.மம்முட்டியும் மோகன்லாலும் இப்போதும் ஒன்றரை கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YOU LIKE THIS POST , PLEASE VOTE HERE