Wednesday, March 9, 2011
Vijay’s Makkal Iyakkam to get 3 seats?

Tamil cinema and Tamil Nadu politics are like two sides of a coin. That too with the Assembly elections nearing, you just can’t separate these two powerful entities, which go hand in hand for decades.Coming to the latest buzz, Vijay’s Makkal Iyakkam, which is said to be the actor’s launch vehicle for his political entry, is all set to face the elections by joining hands with the main opposition AIADMK.“In all probability, the AIADMK leadership may allot three seats to Vijay’s outfit. The actor will not contest the polls. However, he may tour the whole State campaigning for the alliance,” sources say.“Two important office bearers of the Makkal Iyakkam and Vijay’s father S A Chandrasekar will fight the elections on behalf of the Ilaya Thalapathi,” they add. Remember Vijay recently came down heavily on the ruling DMK for allegedly posing hurdles to his film ‘Kavalan’.
Vijay is indeed into politics!
Ilaya Thalapathi Vijay might just put all speculations to rest and enter politics. Party members of AIADMK have let the world know that Vijay’s party Vijay Makkal Iyakkam (VMI) will get three seats if he agrees to join their front along with Captain Vijaykanth’s DMDK.Vijay is currently busy shooting for Nanban in Dehradun. However, word is that he will take some time off to visit Selvi Jayalalitha with his father, S. A. Chandrasekhar. The star himself will not be contesting the elections, as he is busy with his movies but his father will be making a stand from Pudukottai. Vijay will also be a part of the massive campaigning program planned by AIADMK.அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்
அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடத் தயாராகிவிட்டது. ஏற்கெனவே விஜய்யின் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டனர்.இன்னொரு பக்கம், வெறும் ஆதரவு என்ற அளவில் இல்லாமல், விஜய்யின் செல்வாக்கை ஆதாயமாக மாற்றுவதில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிரமாக உள்ளார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது ஏராளமான ரசிகர்கள் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Tuesday, March 8, 2011
Will it be Vikram or Suriya?
The cast for Mani Rathnam’s next film, his take on Kalki’s much loved Ponniyin Selvan is getting finalized. Vijay has landed in the important role of Vallavarayan Vandiyathevan, an impish young man whose adventures form the crux of the plot. Telugu superstar Mahesh Babu, fondly called the Prince is going to play Prince Aditha Karikalan, the troubled heir to the Chozha throne, thwarted in love and doomed to die young.Vikram and Suriya are in the running for the title character, Ponniyin Selvan which is the title conferred on Arulmozhi Varman who becomes famous as Raja Raja Chozhan. Looks like Mani Ratnam is set to achieve a casting coup of all sorts. The two stars will be ready give an arm or a leg for a chance to portray this remarkable character from our proud heritage. We can’t wait to see who gets this role!
அதிமுக ஆதரவு போஸ்டர்: சேலத்தில் விஜய் ரசிகர்களிடயே மோதல்

சேலத்தில் அதிமுக ஆதரவு போஸ்டரால் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.நடிகர் விஜய் கைகளில் அதிமுக சின்னம் பச்சை குத்தியிருப்பது போல் படம் வரைந்து நேற்று இரவு சேலம் நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதை இன்னொரு தரப்பு ரசிகர்கள் எதிர்த்துள்ளனர். அவர்கள் இன்று காலை வேறொரு போஸ்டரை அடித்து அதன் மேல் ஒட்டியுள்ளனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான விஜய் ரசிகர்கள் என்றும், ஒரு தரப்பு மற்ற தரப்பின் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர். தேர்தல் நேரம் என்பதால், ரசிகர்களின் இந்தச் செயலால் சேலம் நகரில் இன்று காலை பரபரப்பு நிலவியது
Shankar’s Nanban completes 2nd schedule today
Ilayathapathy Vijay, Jeeva, Srikanth starrer Nanban which is shooting in Dehradun is going to wrap up the second schedule today.The unit of Nanban has canned some important sequences on the lead cast and it is heard that Jeeva and Srikanth has enjoyed each and every shot while shooting. After many speculations and discussions Vijay has joined the unit in Dehradun a week days ago for the first time. Music director Harris Jayraj has come up with 4 different songs with the same catchy phrase All is well. Nanban is the remake of Hindi blockbuster film 3 Idiots.
Actor Jeeva tweets “And Nanban shooting is been awesome! Lifetime experience for me to work with all the legends like Shankar sir Sathyaraj sir n Ilayathalapati. I and Srikanth are enjoying every bit of this shoot. Just sad that the schedule is finishing today but happy in a way that I’ll get to meet Ma family.”
Monday, March 7, 2011
மணிக்கு உதவிய கமல்!
மணிரத்தினம் தனது பொன்னியின் செல்வன் படத்தின் போர்க் களக் காட்சிகளுக்காகக்கமலிடம் சில ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கிறது.மருதநாயகம் படத்தின் போர்க் களக் காட்சிகளுக்காக பிரெஞ்சு தேசத்தில் இருந்துநூற்றுக்கணக்கான குதிரைகளைத் தருவிக்க ஒப்பந்தம் போட்டிருந்தாராம். அது பற்றிஆலோசனை கேட்ட மணிரத்தினத்துக்கு, அணைத்து ஆலோசனைகளையும் வழங்கியதோடு,தனது மருதநாயகம் படத்தில் பணியாற்றிய சில முக்கிய அசிஸ்டெண்டுகளையும்தேவைப்பட்டால் பயன்படுத்திக்க்கொள்ளுங்கள் என்று சொன்னாராம் கமல். முக்கியமாககவிஞர் புவியரசு, எழுத்தாளர் இரா.முருகன் இருவரையும் உங்கள் திரைக்கதையைச்சோதனை செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றாராம். அவர்கள் இருவரும்மருதநாயகம் பிரி புரடெக்ஷன் கட்டத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதோடு , மருதநாயகத்துக்குப்பிறகு, பொன்னியின் செல்வனை இயக்கும்படி தன்னிடம் சொன்னவர்கள்; அந்த நாவலைவியந்து சொல்லிக்கொண்டிருபவர்கள் என்றாராம்Sunday, March 6, 2011
மக்கள் இயக்கதின் நாகப்பட்டினம் மாநாடு - NEW VIDEO
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பகவலன்'. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
ஜெயலலிதா - நடிகர் விஜய் சந்திப்பு:கிராபிக்ஸ் படம் வினியோகம்
அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் விஜய் மலர் கொத்து வழங்குவது போல, கிராபிக்ஸ் மூலம் தயார் செய்த புகைப்படம், சேலத்தில் அ.தி.மு.க., வினருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஜுரம் சூடுப்பிடித்துள்ளது. பிரதான கட்சிகள், தேர்தல் நேரத்தில், நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம். அரசியல் பிரமுகர்களின், நெருக்கடிக்குள்ளாகும் நடிகர்கள், தாமாகவே கட்சிகளில் தங்களை இணைத்து கொள்வர்.கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. விஜய் நடித்த படங்களை தியேட்டரில், திரையிடுவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதனால், விஜய் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சூழலில், விஜயின் தந்தை சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதாவை சந்தித்தார்.அதனால், நடிகர் விஜய் விரைவில், அ.தி.மு.க., வில் சேரப் போகிறார் என்ற தகவல் பரவியது. சமீபத்தில், இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, நாகபட்டனத்தில், விஜய் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அ.தி.மு.க., தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு மலர் கொத்து வழங்குவது போல கிராபிக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட புகைப்படம், சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தொண்டர்களிடம் பரவலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
